தமிழகத்திலிருந்தே விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இளைஞர்.! நன்றி தெரிவித்த நாசா.! - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தை ஆராயவதற்காக சந்திரயான் 2 விண்கலம் மூலமாக விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தூரமே இருந்த நிலையில், விக்ரம் லேண்டர் ஆர்பிட் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தநிலையில், விக்ரம் லேண்டர் இருந்த இடத்தை கண்டுபிடித்த அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் செப்டம்பர் 17, அக்டோபர் 14,15, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்டு இருந்தது. 


 

நாசா வெளியிட்ட புகைப்படங்களை மதுரை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் செப்டம்பர் 17, முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை நாசா வெளியிட்ட  புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். சண்முக சுப்பிரமணியன் நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்வதில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். 

இதையடுத்து, தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு இ- மெயில் மூலமாக பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியதை  ஆய்வு செய்த அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் அதை உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளனர். 

மெக்கானிக்கல் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai siva subramaniyan identify the vikiram lander


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->