இஸ்ரோ விஞ்ஞானிகளை நோகடித்த சம்பவம்! சோகத்திலும், வேதனையை உண்டாக்கிய நபர்! - Seithipunal
Seithipunal


உலகின் வளர்ந்த நாடுகளுக்கு சவால் அளிக்கும் வகையில் அமைந்த இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன் 2 நிலவின் தென் துருவத்தை அடைவதற்கு பயணப்பட, பயணப்பட உலக நாடுகள் அனைத்தும் புருவத்தை உயர்த்தும் வகையில், ஆரவத்துடன் கவனித்து வந்தன.

சந்திராயன் 2 வை நிலவிற்கு இந்தியா அனுப்பியதன் மூலம், உலக நாடுகளில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்கிற பெருமையை பெற்றது. இந்நிலையில், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதற்கு லேண்டர் விக்ரம் பயணப்பட்ட போது, நிலவை அடைவதற்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் போது புவியின் கட்டுப்பாட்டை இழந்தது. திசைமாறி வந்த லேண்டர் விக்ரம் சுமார் 335 மீட்டர் தொலைவில் வரும் போது கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் கிடைக்காமல், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதுவரை உற்சாகமாக இருந்த விஞ்ஞானிகளை இறுதி சில வினாடிகள் மிகப்பெரிய அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அங்கே மைக் பிடித்து நின்று கொண்டிருக்கும் விஞ்ஞானியிடம் கேள்விகேட்கிறேன் என்ற பெயரில் பத்திரிக்கையாளர் ஒருவர் அநாகரீகமாக நடந்தது கொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. சந்திரயான் திட்டமானது 95 சதவீதம் வெற்றி திட்டம் என தெரிந்தும், அவ்வாறான கேள்விகள் முகம் சுளிக்க வைத்துள்ளது.

விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்கியது பின்னடைவை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஞ்ஞானி ஒருவரிடம் இஸ்ரோ தலைவர் சிவன் எங்கே? ஜீனியர் நீங்கள் ஏன் வருகிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகளால் துளைத்தெடுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட பத்திரிகையாளரை இணையதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் ஆவேசமாக ஒருவர் "இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்புக்கும் அனுபவத்துக்கும், அறிவுக்கும், அர்ப்பணிப்புக்கும், உணர்வுக்கும் இம்மியளவு கூட யாரும் ஈடாக முடியாது. ஒருவரை சீனியர் என்றோ ஜுனியர் என்றோ கண்ணிய குறைவாக அழைக்க அந்த செய்தியாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" என்றும்,

செய்தியாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்களில் ஒருவர்.மக்களின் பிரதிநிதிதானே அன்றி வானத்தில் இருந்து குதித்து வந்த தேவ தூதுவர்கள் அல்ல. எல்லோரையும் மரியாதையாகவும், கண்ணியாகவும் நடத்த தெரிந்து கொள்வதே ஒரு நல்ல செய்தியாளனுக்கு அழகு" என பதிவு செய்துள்ளார் விஞ்ஞானிகளின் உணர்வை புரிந்துகொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leading Press Reporter lashes out press meet with ISRO Scientist


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->