வெறும் 11 ரூபாய் தான் - லாவா புதிய ப்ரோபட்ஸ் N11 நெக்பேண்ட் இயர்போன்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! - Seithipunal
Seithipunal


லாவா நிறுவனம் ‌அதன் புதிய ப்ரோபட்ஸ் N11 நெக்பேண்ட் இயர்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விவரங்கள்: 

லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 11 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பர் 13-16 ஆம் தேதி வரை ரூ. 999 விலையில் விற்பனைக்கு வருகிறது. 

அதன்பின் ரூ. 1,499 விலையில் லாவா இ ஸ்டோர், அமேசான் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த இயர்போனில், டூயல் ஹால்ஸ்விட்ச், டேஷ் ஸ்விட்ச், டர்போ லேடன்சி, ப்ரோ கேம் மோட் வழங்கப்பட்டுள்ளது. 

• இதில் உள்ள ப்ரோ கேம் மோட் 60 மில்லி செகண்ட் வரையிலான லேடன்சி மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்குகிறது. 

• மேலும், 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5.2, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

• IPX6 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

• இத்துடன், மேக்னடிக் ஹால்ஸ்விட்ச், டேஷ் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.

• வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை ஆக்டிவேட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

• இதில் 280 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

• இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.

• மேலும், சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 42 மணி நேரத்திற்கான பிளேபேக் கிடைக்கிறது. 

• இந்த மாடல், ஃபயர்ஃபிளை கிரீன், கை ஆரஞ்சு மற்றும் பேந்தர் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.  

• இந்த இயர்போன் மாடலுக்கு 12 மாதங்கள் வாரண்டி மற்றும் 2 மாதங்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த இயர்போன் வாங்கிய 30 நாட்களில் பதிவு செய்யும் பட்சத்தில் கானா சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lava New Probuds N11 Neckband Earphone!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->