இன்று விண்ணில் சீறிப்பாய போகும் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரோ வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ் - இஓ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதலத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. 

இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைக்கோள்களில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ, 365 கிலோ எடை கொண்டது. இது வண்ணப் புகைப்படம் எடுக்கும் திறமை உடையது. நியூசர் செயற்கைக்கோள், 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கும். இது இரவு பகல் உட்பட அனைத்து பருவம் தெளிவான புகைப்படம் எடுத்து வெளியிடக்கூடியவை. 

இவற்றுடன் கல்வி சார்ந்த பணிக்காக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதன் எடை 2.8 கிலோ ஆகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராக்கெட் ஏவுதலத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO PSLV C52 Today Launch


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->