லேண்டர் விக்ரம் ஆயுட்காலம் முடிகிறது! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்தியா சந்திரயான் 2 வை விண்ணுக்கு அனுப்பியது. 48 நாட்கள் திட்டத்துடன் சென்ற சந்திரயான் 2 ஆர்பிட்டர், லேண்டர் விக்ரம், பிரக்யான் என்ற மூன்றையும் சேர்த்து பயணித்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பை இழந்துவிட்டது. அதனிடமிருந்து எந்த ஒரு தகவலையும் அதன் பின் பெற முடியவில்லை. இதையடுத்து  நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டரின் தற்போதைய நிலைமையை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வந்தனர். 

மேலும், நாசாவின் ஆராய்ச்சி மையங்களிலிருந்து விக்ரம் லேண்டருக்கு ஹலோ சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. மற்றொரு முயற்சியாக தற்போது நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் மூலம் நிலவில் விக்ரம் லேண்டர் நிலையை சரியாக கணிக்கும் வகையில் படம் எடுக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். இது குறித்து கடந்த 17 ஆம் தேதி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினமே இஸ்ரோவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து முன்னேறுவோம் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் விக்ரம் லேண்டருடனான தொடர்பு கொள்ளும் முயற்சி நிறுத்தப்பட்டதா என குழப்பம் உருவாகியது. 

தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இஸ்ரோ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்றுடன் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டு 13 நாட்கள் முடிந்துவிட்டதால், ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டும் என்பதால், இனிமேல் தொடர்பு கொள்ள வாய்ப்பு குறைவு என்பதால் இஸ்ரோ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சந்திரயான் 2 ஆர்பிட்டரின் அனைத்து பகுதிகளும் சரியாக இயக்கப்படுகின்றன. ஆர்பிட்டர் கொண்டு செய்யப்படும் ஆரம்ப சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. ஆர்பிட்டர் அனைத்து பகுதிகளும் செயல்திறன் திருப்திகரமாக உள்ளது. திட்டமிடப்பட்ட அறிவியல் பரிசோதனைகளை ஆர்பிட்டர் திருப்தியாக செய்து கொண்டிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரோ வல்லுநர்களைக் கொண்ட தேசிய அளவிலான குழு லேண்டருடன் தொடர்பு இழப்புக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro latest update about lander vikram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->