59 செயலிகளை தடை செய்த விவகாரம்! செயலிகளை இரண்டாக பிரித்து வெளியிட்ட உத்தரவு!  - Seithipunal
Seithipunal


ஹலோ டிக்டெக் ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செல்போன் செயலிகளை இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து தற்போது அந்த 59 செயலிகளின் செயல்பாடு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே இது தொடர்பாக இணைய சேவையை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு சட்டத்தின்படி இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவை சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தடை விதித்தது.

இந்தத் தடையில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஷேர்இட் டிக் டாக்  உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 59 செயலிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பட்டியலில் 35 செயலிகளையும், இரண்டாவது பட்டியலில் 24 செயலிகளையும் இரு பிரிவுகளாக தடை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

உடனடியாகத் தடை செய்யச் சொல்லி அனைத்து இணைய சேவைதாரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப் லிங்க், ஐபி அட்ரஸ் ஆகியவையும் அனுப்பிவைக்கப்பட்டு எளிதாக முடக்கும் வகையில் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian govt order to network providers to ban Chinese apps


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->