140 நகர்களில் கூகுள் தருகிறது வேலைவாய்ப்பு.! எதிர்பார்ப்பில் இளைஞர்கள்.!  - Seithipunal
Seithipunal


கூகுள் நிறுவனம் தனது புதிய வேலைவாய்ப்பு செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த புதன்கிழமையன்று தனது கோர்மோ ஜாப்ஸ் என்ற செயலியை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இது வேலை தேடும் நபர்களுக்கு உதவி செய்யும் என்றும், இந்தியா முழுவதும் இருக்கும் பயனாளர்களை கண்டுபிடித்து விண்ணப்பிக்க உதவி செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூகுள் கூறியுள்ளது. மேலும், இதனால் முதலாளிகளுடன் தொழிலாளர்கள் விரைவில் இணைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருக்கும் 140 நகர்களில் முதற்கட்டமாக இம்முறை துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் நாகரி மற்றும் டைம்ஸ் ஜாப்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிட்டு வேலை தேடுபவர்களை சாத்தியமான முதலாளியுடன் இணைக்க இது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடத்தில் இந்தியாவில் ஜாப் சென்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட செயலியே தற்போது, கோர்மோ ஜாப்ஸ் என்று பெயரிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் பங்களாதேஷ் நாட்டில் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த செயலி இந்தோனேசியா போன்ற பல பிராந்தியத்திலும் விரிவடைந்துள்ளது என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

google news app for jobs on india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->