குறை கண்டுபிடித்தால் ரூ.25 லட்சம் பரிசு - கூகுள் நிறுவனத்தின் இந்த ஆஃபர் தெரியுமா உங்களுக்கு?!  - Seithipunal
Seithipunal


கூகுள் நிறுவனம், தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறிய புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரையிலான சன்மானம் வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம்.

சன்மான தொகை ஆய்வாளர்கள் கண்டறியும் பிழை மற்றும் அதன் குறிக்கோள் என பல்வேறு அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது. மேலும், 100 டாலர்களில் துவங்கி அதிகபட்சமாக 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரை சன்மான தொகை வழங்கப்பட உள்ளது. 

அதிகபட்சமாக சன்மான தொகை வழக்கமில்லாத அல்லது வித்தியாசமான பிழைகளுக்கே வழங்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் மென்பொருள்களை வழங்கும் நிறுவனமாக கூகுள் விளங்குகிறது. 

கூகுள் நிறுவனம், சொந்தமாக பிழை கண்டறியும் திட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம் , ஓபன் சோர்ஸ் திட்டத்தை பாதிக்கும் பிழையை கண்டறிவதற்கு ஏற்ப தகுதியான தொகையை ஆய்வாளர்கள் சன்மானமாக பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு தனது ஓபன் சோர்ஸ் வினியோகத்தின் மீதான தாக்குதல்கள் 650 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளதாவது. கூகுளின் கோலங், ஆங்குலர் மற்றும் ஃபுகிசியா போன்ற திட்டங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

google mistake find prize


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->