துவங்கியது பிரீ வைஃபை சேவை..! எந்த நேரத்தில்? எங்கு? எப்படி?..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருக்கும் அய்யாச்சாமி பூங்கா., பழைய பேருந்து நிறுத்தம்., புதிய பேருந்து நிறுத்தம்., சூரமங்கலம் உழவர் சந்தை., மாநகராட்சி அலுவலகம்., அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஸ்மார்ட் வளாகம் ஆகிய 6 இடங்களில் வைஃபை சேவையானது சேலம் மாநகராட்சி ஆணையரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறாக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள வைஃபை சேவையானது அரசு சார்ந்த மாநகராட்சி., மின் வாரிய அலுவலகம்., வேலைவாய்ப்பு வருவாய் துறை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் இணையதளங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இலவசமாக எவ்வளவு வேண்டுமானாலும் தடையின்றி உபயோகம் செய்து கொள்ளலாம். 

இதே தருணத்தில்., பிற இலவச இணையதளங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பயன்படுத்தவும் அல்லது விட்டுவிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது கிளவுட் தொழில் நுட்பத்தின் மூலமாக 100 எம்பி வேகத்தில் செயல்படும் காரணத்தால் ஒரே நேரத்தில் 200 நபர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இணைய சேவையை பயன்படுத்தும் பயனாளிகள் தங்களின் அலைபேசி மாநகராட்சி செயலியில் பதிவு செய்த பின்னர் ஓடிபி என்னை வைத்து அவர்களின் இணைப்பை பெற்று கொள்ளலாம் என்றும்., துவக்கத்தில் இது பத்து வினாடிகள் இடம்பெறும் என்றும் அதற்குப் பின்னர் இணைப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இலவச வைஃபையில் அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும்., இந்த இணைய செயல்பாடுகள் உபயோகத்தை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் தனி அலுவலகம் மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free wifi connection


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->