முகநூலின் புதிய அப்டேட்.! வெகு நாட்களாக வைக்கப்பட்ட கோரிக்கை.!! முடித்து வைத்த மார்க்.!!! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் பெரும் பங்கு வகிக்கும் முகநூலை, உலகம் முழுக்க கொடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகத்தில் யார் என்று தெரியாதவர்களிடம் கூட நாம் நண்பர்களாக பழகி கொள்ளலாம். பல நல்ல கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம். 

இந்த முகநூலின் பயன்பாடு என்பது, உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிபர்கள், திரை நட்சத்திரங்கள் என அனைவரையும் தற்போது அதிகம் கவர்ந்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள் அதிகமாக அரசியல் கருத்துக்களையும், தங்கள் கட்சியின் பெருமைகைளையும், கொள்கைகளையும் பரப்புவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த முகல்லொளி அவ்வப்போது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதில், தனியாக உரையாடி கொள்ள மெஸ்ஸெஞ்சர் ஆப் உள்ளது. இதிலும் அவ்வப்போது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்த மெஸ்ஸெஞ்சர் ஆப்-ல் பயனாளர்கள் நீண்டகாலமாக எதிர் பார்த்த ஒரு வசதி, தற்போது வெளியான அப்டேட்டில் இணைத்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. 

அந்த வசதி என்னவென்றால், வாட்சப்பை போலவே இந்த செயலியிலும், இனி தவறாக நாம் அனுப்பிய செய்திகளை அழிக்க இயலும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதனை தங்க செய்தி அனுப்பிய 10 நிமிடத்திற்குள் மட்டுமே அழிக்க முடியும். இதனை "delete for everyone" என்கிற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும் என்று முகநூல் நிறுவனர் மார்க் தெரிவித்துள்ளார்.
 

English Summary

Facebook messenger update


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal