உங்கள் கணினியில் வைரஸ் உள்ளதா?... இதை செய்து பாருங்கள்! - Seithipunal
Seithipunal


பெரும்பாலும் கணினி வைத்திருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது வைரஸ் தான். கணினியில் வைரஸ் உள்ளதா? இல்லையா? என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

கணினி செயல்பாட்டின் வேகம் குறைந்து காணப்படும்.

கணினி அடிக்கடி செயலிழந்து போகும்.

கணினி சரிவர செயல்படாததுடன் அடிக்கடி தானாகவே மீண்டும் இயங்கும். 

அடிக்கடி தேவையில்லாத பிழை செய்திகள் தோன்றும்.

எந்தவொரு காரணமும் இன்றி Antivirus Software செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும்.

வினோதமான செய்திகள் திரையில் தோன்றும்.

அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் (Extension) தோன்றலாம்.

கணினியில் இருக்கும் பயன்பாடுகள் (Applications) சரிவர இயங்காது.

வட்டுகளையும் (Disks), வட்டு இயக்கிகளையும் (DIsk drivers) பயன்படுத்த முடியாது.

உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்கு தெரியாமலேயே நகலெடுக்கப்பட்டிருக்கும் (Copied).

வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் (Folders) காணப்படும்.

அச்சிட வேண்டிய ஆவணங்களை சரியாக அச்சிட முடியாது.

உங்கள் கணினியில் உள்ள முக்கியமான Files உங்களுக்கு தெரியாமலேயே நீக்கப்பட்டிருக்கும்.

எந்தவொரு காரணமும் இன்றி கணிப்பொறியின் நினைவகம் குறைந்து போகும்.

நீங்கள் தோற்றுவிக்காத புதிய Short Cuts திரைமுகப்பில் காணப்படும்.

கணினியின் வேகம் அதிகரிக்க வேண்டுமா?

தேவைப்படாத கோப்புகளை அழிக்கும்போது Shift Keyஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், சுநஉலஉடந டீiலெ; கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப்படும். 

உங்கள் கணினி திரையில் Wallpaper பயன்படுத்தினால் கணினி செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கும்.

கணினியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்தால் உங்கள் RAM-ன் சக்தி கண்டிப்பாக குறைந்துவிடும். 

ஒரே நேரத்தில் பல கோப்புகளை திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது கணினியின் வேகத்தைக் குறைக்கும்.

ஒரே நேரத்தில் பல கோப்புகளை திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பை தவிர மற்றவற்றை சிறிதாக்கி (Minimize) கொள்ளவும்.

புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றை தனியாக சி.டி, டிவிடி-களில் வைத்துக்கொண்டால், ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சமாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

computer virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->