விடாமுயற்சியாக மீண்டும் விண்ணில் பாய்கிறது சந்திராயன் இஸ்ரோ சிவன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


2020ம் ஆண்டு இறுதிக்குள்  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகள் அனைத்தும் முடிந்து விடும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் சிவன்  பேசியதாவது, 2021ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கான பயிற்சி தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், நிலவு தொடர்பான ஆய்வுக்கு சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சந்திராயன் 2ல் இருந்தது போல அதில் ஆர்பிட்டர் இருக்காது எனவும் ரோவர் மற்றும் லேண்டர் மட்டுமே இருக்கும் என சிவன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrayaan 3 project without orbiter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->