அடேயப்பா..! ஏ.சி வசதி கொண்ட பைக்.. விலை எவ்வளவு தெரியுமா..? கெத்து காட்டும் தமிழர்கள்..! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரைச் சேர்ந்த சு.பாலச்சந்திரன், ப.பன்னீர்செல்வம், அருணகிரி ஆகிய மூவரும் சமீபத்தில் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

இதுகுறித்து பேசிய அவர்கள், சிங்கப்பூர் நாடு தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டு ஆகிறது. இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே நாங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் வந்துள்ளோம்.

நாங்கள் சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறோம். அங்கிருந்து கடந்த மார்ச் 26 ஆம் தேதி பயணத்தை தொடங்கினோம். மலேசியா, மியான்மர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்தியாவுக்கு வந்தோம்.

பெரும்பாலும் சாலை மார்க்கமாகவே வந்தோம். ஒரு சில இடங்களில் படகில் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டுபயணம் செய்தோம்.

நாள் ஒன்றுக்கு சுமார் 400 கி.மீட்டர் பயணம் செய்து,தற்போது தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வந்துள்ளோம். வேளாங்கண் ணிக்கு சென்று விட்டு வரும் 8 ஆம் தேதிசென்னையில் பயணத்தை நிறைவு செய்கிறோம்.

13 ஆயிரம் கிலோ மீட்டர்தூரம் பயணித்துள்ளோம்.இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் 1800 சிசி கொண்டவை.

சொகுசு காரில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மோட்டார் சைக்கிளில் உள்ளது. ஜிபிஆர்எஸ், ஏசி உள்ளிட்ட வசதி உள்ள இந்த மோட்டார் சைக்கிள் இந்திய மதிப்பில் ரூ.28 லட்சமாகும் என்று கூறியுள்ளனர்.

English Summary

bike ride like a luxury travel


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal