இனி பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் பைக் நின்றால் இப்படி செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


பலருக்கும் திடீரென நடுவழியில் நாம் பயன்படுத்தும் வாகனங்கள் நின்றுவிட்டால் என்ன செய்வது என்று அப்படியே குழம்பி போய் டென்ஷன் ஆகிவிடுவோம். ஏதாவது அவசர காலத்தில் செல்லும் போது அல்லது இரவு நேரத்தில் செல்லும்போதோ உதவி கூட யாரும் இருக்க மாட்டார்கள். 

அப்படி நமது வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டால் அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த விஷயங்கள் ஏற்கனவே பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், புதிதாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது இருக்கும் என்று விரும்புவதால் தான் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

இரு சக்கர வாகனங்களில் சோக் என்ற ஒரு கருவி இருக்கிறது. இன்ஜினுக்குள் பெட்ரோலை இது வேகமாக செலுத்த உதவும். 

நீண்ட நேரத்திற்கு வாகனத்தின் எஞ்சினுக்குள் பெட்ரோல் போகவில்லை என்றால் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அப்போது சோக்கை பிடித்தால் வேகமாக பெட்ரோல் சென்று வாகனம் இயங்கும்.

இந்த சோக்கை பெட்ரோல் காலியாகி நடுரோட்டில் நிற்கும் போதும் பயன்படுத்த முடியும். என்னதான் பைக்கில் இருக்கும் பெட்ரோல் முழுவதும் காலியாகி விட்டாலும் சில இடங்களில் பெட்ரோல் தங்கி இருக்கக்கூடும்.  பெட்ரோல் இல்லாத காரணத்தால் நாம் சோக்கை அழுத்தும் போது டேங்கில் அழுத்தம் ஏற்பட்டு உடனே அது இன்ஜினுக்குள் செல்லும். இதை வைத்து ஸ்டார்ட் செய்து அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு உடனே நாம் சென்றுவிடலாம். 

அடுத்தது சைடு ஸ்டாண்ட் இந்த சைடு ஸ்டாண்ட் பயன்படுத்தி நாம் வாகனத்தை நிறுத்தும்போது ஒரு ஓரமாக பெட்ரோல் தங்கி இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலையில் பெட்ரோல் இன்ஜினுக்குள் செல்லாமல் சில இடங்களில் தேங்கியிருக்கக்கூடும். 

இந்த பெட்ரோல் உங்களுக்கு நடுரோட்டில் வாகனம் பெட்ரோல் தீர்ந்து நிற்கும்போது உதவும். எனவே வாகனத்தை வலது மற்றும் இடது புறமாக சாய்த்து அந்த பெட்ரோலை நடுவில் கொண்டு வந்து எஞ்சினுக்குள் செலுத்தலாம். 

இதன் மூலம் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு நாம் சென்று விட உதவும். பைக்கில் பெட்ரோல் மிகவும் ட்ரை ஆக வைத்துக் கொள்ளக் கூடாது. இது என்ஜினை பாதிப்படைய வைக்கும். எனவே, உங்கள் வண்டி எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

மேலும் பைக்கை முறையாக சர்வீஸ் செய்து கொள்வதால் மைலேஜ் அதிகப்படியாக கொடுக்கும். இதன் மூலம் தேவையற்ற இடங்களில் பெட்ரோல் தீர்ந்து போய் நாம் நிற்பதும் தடுக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike fuel tank Empty problem solution


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->