புதுசா போன் வாங்க போறீங்களா.? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க.!  - Seithipunal
Seithipunal


நாளாக நாளாக செல்போன் பயன்பாட்டாளர்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். அதிலும் பலருக்கு மார்க்கெட்டில் புதிதாக கிடைக்கும் செல்போனை உடனடியாக வாங்கி வைத்துக் கொள்வது தான் கெத்து என்று நினைக்கும் அளவிற்கு இருக்கின்றது. தவிர்க்க முடியாத ஒன்றாக செல்போன் அனைவரது வாழ்விலும் மாறிவிட்டது. 

இந்நிலையில், ஐபோன் தயாரிக்கும் நிறுவனம் இனி சார்ஜர் வழங்கப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் ஐபோன்கள் பொதுவாக பாஸ்ட் சார்ஜர்களை வழங்குவதில்லை. குறைந்த வேகத்தில் செல்போனை சார்ஜ் செய்யும் சார்ஜரை தான் இன்றைய காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் வழங்கி வருகின்றது. 

ஏற்கனவே, ஐ போன் பயனாளர்களுக்கு இது மன வருத்தத்தை கொடுத்துள்ளது, ஆனால்., தற்போது ஒரு படி மேலே சென்று ஐபோன்களில் சார்ஜரே கொடுக்கப்படாது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதற்கு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. அதில் முக்கியமானது மின்னணு கழிவுகளை குறைப்பது என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apple company new announcement about charger


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->