வானில் நிகழவிருக்கும் அதிசயம்...மறக்காம பாருங்க..! - Seithipunal
Seithipunal


சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருக்கும் வியாழன் கோள் தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும்.  பெரிய அளவில் இருக்கும் இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்த பிரம்மாண்ட கோள் நாளை பூமிக்கு அருகில் வரவிருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. நாளை சூரியன் மேற்கு திசையில் மறையும் போது வியாழன் கோள் கீழ் திசையில் தெரியும்.  இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்னதாக கடந்த 1963 ஆம் ஆண்டு வானில் நிகழ்ந்திருக்கிறது. அப்போது வியாழன் கோள் வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

பொதுவாக வியாழன் கோள் பூமியில் இருந்து 96.5 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால், நாளை வியாழனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 36.5 கோடி கிலோமீட்டராக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

59 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் காணலாம். அப்படி பார்க்கும் போது வியாழனை சுற்றிவரும் நான்கு துணைக்கோள்களையும் காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after 59 years jupitter bg size on sky


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->