தீயாய் வைரலாகி வாடிக்கையாளர்களுக்கு பீதியை கிளப்பிய வீடியோ.! உணவு நிறுவனம் விடுத்த அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சோமாடோ உணவு நிறுவனம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வந்தது.           

இந்த வீடியோவில் சோமாடோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை கொண்டு செல்லும்போது,  அதை உரியவர்களுக்கு வழங்குவதற்கு உணவை சாப்பிட்டுவிட்டு அதை மீண்டும் மூடி, ஸ்டிக்கர் ஒட்டி அப்படியே எடுத்து செல்கிறார்.



இதனை நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ஆன்லைனில் உணவு வாங்கும் வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து கருத்துக்களை தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சோமாடோ நிறுவனம் இனி வாடிக்கையாளர்களிடம் உணவை சரியான முறையில் கொண்டு சேர்ப்போம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



மேலும் அதில், வீடியோவில் வரும் ஊழியர் மதுரையைச் சேர்ந்தவர் எனவும், அவரிடம் விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான உணவை சேர்க்க வேண்டியது எங்களுடைய கடமை, இனி உணவுப் பாக்கெட்டுகளின் மீது யாரும் பிரிக்க முடியாதவாறு, டேப் கொண்டு பேக் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அது உங்களது உணவை மேலும் பாதுகாக்க உதவும் எனவும் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

zomato announce about food order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->