சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு  உதவி செய்த இளைஞர் குழு - Seithipunal
Seithipunal


சேலத்தில் சாலையோரம் தங்கியிருந்த ஆதரவற்ற முதியவரை அவரது குடும்பத்தில் இணைத்த இளைஞர்களின் சமூக அக்கறையுள்ள செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

சேலம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரத்திலும், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்டோர் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்

இந்நிலையில் சேலம் இளைஞர் குழு நிறுவனர் பிரதீப், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களை குளிக்க வைத்து, புத்தாடைஅணிவித்து, உணவு வழங்கினர்

பொன்னம்மாபேட்டை பகுதியில் இருந்த 2 ஆதரவற்ற நபர்களை மீட்டு அந்த இடத்திலேயே குளிக்கச் செய்து முடிதிருத்தி அழகுபடுத்தினர் பின்னர் அவர்களை புத்தாடை உடுக்க செய்தனர்

தொடர்ந்து பட்டை கோயில் வஉசி மார்க்கெட் கோட்டை மாரியம்மன் கோயில் பழைய பஸ் ஸ்டாண்ட் அரசு மருத்துவமனை பகுதிகளில் இருந்த 11 ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கினர் இளைஞர்களின் செயலை கண்டு மக்கள் மனதார பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்

இந்த நிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் அருகே இருந்த சுமார் 75வயது மதிக்கதக்க ஒரு முதியவரை குளிக்கச் செய்து புத்தாடை அணிவித்து அவருக்கு உணவு வழங்கிய நிகழ்ச்சியினை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் பதிவேற்றம் செய்தனர்

அதனைப் பார்த்த முதியவரின் பேரன் அந்த குழுவினரை தொடர்பு கொண்ட போது ,அந்த முதியவர் பெயர் ஷாபிகான் என்பதும் அவர் சேலம் லைன் மேடு பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த இளைஞர் குழுவினர் அந்த முதியவரை அவரது உறவினர்கள் முன்னிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அந்த முதியவர்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர் சேலம் இளைஞர் குழுவினரின் தன்னலமற்ற இந்த சேவைக்கு முதியவரின் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்

இதுதொடர்பாக பேசிய சேலம் இளைஞர் குழுவை சேர்ந்த பிரதீப் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களுக்கு உதவும் இந்த பணியை தொடர்ந்து செய்வோம் என்றார்

என்னிடம் 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்” என்று சுவாமி விவேகானந்தர் அறைகூவல் விடுத்தார் இன்றைய இந்தியா இளைஞர்களின் கையில் பாதுகாப்பாக உள்ளது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youths helping to beggers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->