ஹெல்மெட் போடா முடியாது.. காவல் அதிகாரிகளை மிரட்டிய வாலிபர்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிரிக்கப்பட்டது. 

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் தாய், தந்தை, குழந்தைகளும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவிட்டு அன்றே காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை இறங்கினர். இதனால் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களின் ஹெல்மெட் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். 

ஹெல்மெட் கடைகளில் விற்பனை இரு மடங்காக அதிகரித்தது. காவல்துறை அதிரடி நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தபோதும் காவல்துறையினர் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

இந்நிலையில், கோவை மாவட்டம் உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகவேல் தலைமையிலான காவல் துறையினர், உக்கடம் நெடுசாலையில்  வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, ஹெல்மெட் அணியாமல் வந்த இஸ்மாயில் வரை நிறுத்தியுள்ளனர். இஸ்மாயில் காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்து தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man who threatened police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->