இந்தி பாடகர் என கூறி வேலையில்லா பட்டதாரி செய்த காரியம்!! மடக்கிபிடித்து குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார்!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு மகேந்திரவர்மன் என்ற மகன் உள்ளார். அவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார்.

 இந்நிலையில் மகேந்திர வர்மன் ஃபேஸ்புக்கில் இந்தி பிண்ணனி பாடகர் அர்மான் மாலிக் என்ற பெயரில் அக்கவுண்ட் ஒன்று துவங்கியுள்ளார் அதில் அவரது வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திர வர்மனை பாடகர் என்று நினைத்த இளம்பெண்கள் அவருடன் நண்பர்களாகியுள்ளனர்.

இவரும் அர்மான் மாலிக் போலஅவர்களிடம் பேசி  போன் நம்பர்  பெற்றுக்கொண்டு வாட்ஸ்அப் மூலம் பழகதுவங்கியுள்ளனர். மேலும் அந்த பெண்களிடம் பாலிவுட் சினிமாவில் பாட, தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி புகைப்படங்களை அனுப்ப கூறியுள்ளார். இந்நிலையில் அவர்கள் அனுப்பிய புகைப்படத்தை ஆபாசமாக மார்பின் செய்துள்ளார் மேலும் சில பெண்களிடம் கவர்ச்சியான புகைப்படங்களையும் அனுப்ப கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து மகேந்திரவர்மன் அந்த பெண்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டு மிரட்டியுள்ளார். அவ்வாறு அவர்கள் பணம்  தராவிட்டால் அந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும்  மிரட்டியுள்ளார். இந்நிலையில் அதற்கு  பயந்து அந்த பெண்களும் கேட்ட தொகையை கொடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறு மகேந்திரவர்மன் 15க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இந்நிலையில் சூலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இது குறித்து போலீசாரிடம் புகார் செய்துள்ளார்  அதனைத் தொடர்ந்து அவரை கைதுசெய்ய போலீசார் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி அந்த பெண் மகேந்திரவர்மனிடம் நைசாக பேசி பணம் கோவைக்கு வரவழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பணம் வாங்கவந்த மகேந்திரவர்மனை போலீசார் மடக்கி பிடித்தனர் பின்னர் அவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man cheated girl as said hindi movie singer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->