தமிழகத்தில் ஒரு குவாட்டர் 400 ரூபாய்.. குடிமகன்களுக்கு டோர் டெலிவரி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. 

இதனையடுத்து நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டினை விட்டு வெளியே வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் பலர் தங்கள் சொந்த ஊருக்கு போகமுடியாமல் உள்ளனர். மேலும், மதுக்கடைகள் மூடப்பட்டது.

இந்நிலையில் சென்னை திருவெற்றியூர் பகுதியை பகுதியில் வீரபத்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அதே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், வாலிபர் ஒருவர் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் செல்வதை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். 

அதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது அவரின் பெயரை ஐயப்பன், திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மெடிக்கல் பிரதிநிதியாக பணியாற்றி வருபவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

அவரின் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் 12 மதுபாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் 144 தடை உத்தரவு காரணமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. 

ஐயப்பனின் காரில் இருந்து 750 மது பாட்டில்களையும், மதுவிற்கு அவர் பயன்படுத்திய கார், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஒரு குவாட்டர் பாட்டில் 400 ரூபாய்க்கு விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrested chennai police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->