இளம்பெண்ணை வீட்டருகில் இறக்கிவிட்ட ஆண் நண்பருக்கு நடந்தேறிய சோக சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இளம் பெண் ஒருவரை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட வந்த ஆண் நண்பரை, பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது ஆண்நண்பர் காரில் அழைத்து வந்து அவரது வீட்டருகில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள், காரை மறித்து அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற இளைஞர் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அதே காரில் மீண்டும் பெண்ணின் வீட்டருகே வந்துள்ளார். அப்போது காரை மடக்கிய பெண்ணின் உறவினர்கள், காரில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கியதோடு, காரையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl releations beat his boy friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->