ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு தடை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

சேலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து சனி மற்றும் ஞாயிறு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்களில் வருபவர்களில் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் அல்லது ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கோவிட் நெகட்டிவ் என சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் போக்குவரத்தின் போது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்றும் கூறப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yercaud Tourist Peoples Visit Restriction on Week Off Days Says Salem District Collector


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->