பணியை சரியாக செய்த போலீசாருக்கு, சமூகவலைத்தளத்தில் செய்யப்பட்ட அவமரியாதை.!     - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் இரவு 11 மணிக்குள் மூட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஆரோவில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அவர்களின் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சுமார் 11:30 மணி அளவில் புதுச்சேரி & திண்டிவனம் சாலை பட்டானூரில்  சாலையை ஆக்கிரமித்து ஒரு தனியார் ஓட்டல் இயங்கிவந்தது. ஓட்டலுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் ஆகிறது எனவே கடையை மூடும்படி போலீசார் ஓட்டல் நடத்துபவர்களிடம் கனிவான அணுகுமுறையில் கூறியுள்ளார்.

ஒட்டலில் இருந்தவர்கள் போலீசாரின் பேச்சை கேட்காமல் ஓட்டலை நடத்தி வந்துள்ளார். போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கி ஓட்டல் உரிமையாளர் யார்? என்று அங்கு உள்ளவர்களிடம் விசாரித்து போது இந்த உணவகத்தில் வணிக சிலிண்டரை உபயோகப்படுத்தாமல், வீட்டுக்கு உபயோகப்படுத்தபடும்.. சிலிண்டரை சட்டத்திற்கு புறம்பாக உபயோகபடுத்தி உள்ளனர் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். 
 
அதனைத் தொடர்ந்து  போலீசார் கடையை மூடும் படி எச்சரித்தனர்.அதற்கு கடைக்காரர் மூட முடியாது எங்களுக்கு பெரிய பெரிய கட்சிக்காரர்களை தெரியும்..,நீங்க என்ன எங்களை ஒண்ணும் செய்ய முடியாது என்று ஓட்டலில் இருந்தவர்கள் போலீசாரை மிரட்டி பேசி உள்ளார்.

ஒரு கட்டத்தில் ஓட்டலில் உள்ளவர்கள் போலீசாரை ஒருமையில் சாடியுள்ளனர், போலீசாரின் பணியை செய்ய விடாமலும் தடுத்துள்ளனர். இதனால் போலீசாருக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, தனைத் தொடர்ந்து போலீசார் வீட்டு உபயோக சிலிண்டரை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிந்த ஆரோவில் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்,

இந்நிலையில் அந்த கடைக்கார்களின் தூண்டுதலின் பேரில் போலீசாரின் நியாயமான பணியை தவறான கோணத்தில் சித்தரிக்கும் வகையில் போலீசாரின் முகத்தினை வட்டமிட்டு பொய் வீடியோக்களையும், போலீசார் மீது அவதூறுகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்

இது தமிழக காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரவிவருகிறது எனவே சிறப்பாக ஆட்சி செய்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wrong information in soacil media abut police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->