சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜ் காலமானார்.

திருநெல்வேலியை சேர்ந்தவரான டி.செல்வராஜ் (வயது 81) வழக்கறிஞராக பணியாற்றிய அவர், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் பணிபுரிந்துள்ளார். இவர் எழுதிய தேநீர் என்ற நாவல் திரைப்பட இயக்குநர்களான ஜெயபாரதி மற்றும் கே.பாக்யராஜால் ஊமை ஜனங்கள் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

டி.செல்வராஜ் எழுதிய தோல் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருதும் பெற்ற டி.செல்வராஜ், மூலதனம், மலரும் சருகும், அக்னி குண்டம் உள்ளிட்ட சிறந்த நாவல்களையும் ஏராளமான சிறுகதை மற்றும் நாடகங்களையும் எழுதியுள்ளார். 

கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த டி.செல்வராஜ் திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை காலமானார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

writter selvaraj passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->