சிறார்களை பாதிக்கும் புகையிலை விளம்பரங்கள்.. மருத்துவர் அன்புமணி இராமதாசு.!! - Seithipunal
Seithipunal


உலகில் மனிதன் பலவிதமான தீய பழக்கங்களை தன்னகத்தே வைத்துள்ளான். அதில் தனது உயிருக்கும், தன்னை சார்ந்துள்ள உயிரிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நன்கு அறிந்து கையில் எடுத்துள்ள பழக்கமாக புகையிலை (கொள்ளிக்கட்டை) பழக்கம் இருந்து வருகிறது. 

இந்த பழக்கத்தை பழகிய நபர்கள் ஏராளமாக இருந்தாலும், விளையாட்டு தனமாக புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி, பின்னால் புகையை மறக்க இயலாமல் தங்களை தாங்களே வருத்திக்கொண்டு இருக்கும் நபர்களும், எந்த நேரமும் எதற்கெடுத்தாலும் புகையை பிடிக்கும் நபர்களும் ஏராளம் இருந்து வருகின்றனர். 

அன்றைய காலங்களில் புகை பிடிப்பதை பார்த்தால் மானம் போய்விடும் என்று இருந்த சூழலெல்லாம் மாறி, இன்றளவில் புகை பிடித்தால் தான் தன்னை சமூகத்தில் நான்கு பேர் மதிப்பார்கள் என்ற மனநிலை வந்துள்ளது. இதற்கு பெரும் உதவியாக நடிகர்களின் திறமையை காண்பிக்க புகையிலையை ஸ்டைலாக பற்றவைப்பது, வித்தை காண்பிப்பது என பலரின் மனநிலையை மாற்றியுள்ளனர். 

பொது இடங்களில் புகைபிடிக்க தடை, இளம் வயதுள்ள சிறார்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கூடாது, திரைப்படங்களில் வரும் புகையிலை சார்ந்த பொருட்களின் செயல்பாடுகளுக்கு எச்சரிக்கை வாசகம், திரைப்படங்களின் துவக்கத்திலேயே புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு என்ற வாசகம், புகையிலை பொருட்களில் எச்சரிக்கை விழிப்புணர்வு படம் என்று பல விழிப்புனர்வுகளை வழக்காடி, சட்டமாக கொண்டு வந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி மற்றும் பிற தன்னார்வலர்கள். 

உலகளவில் புகையிலை பொருட்களுக்கு எதிராக பல குரல்கள் பதிவு செய்யப்பட்டு வந்தாலும், இன்றைய காலகட்டங்களில் சிறு வயதுள்ள நபர்கள் அதிகளவு புகைப்பழக்கத்திற்கு உள்ளாவது அவர்களின் எதிர்காலத்திற்கும் பெரும் கேள்விக்குறியாக அமைகிறது. இளம் வயதினர் நாடுகளின் எதிர்கால செல்வங்கள் என்ற அடிப்படையில், அவர்களின் எதிர்காலத்தை சிந்தித்து செயல்படுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், புகையிலை பொருட்களுக்கு விலக்கு சொல்லும் வகையில் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே 31 ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் ட்விட்டர் பக்கத்தில் பல உரையாடல் வளம் வருகிறது. அவற்றில் சிலவற்றை இத்துடன் இணைத்துள்ளோம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World No-Tobacco Day twit by Anbumani Ramadoss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->