கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்தி, மயிலாடுதுறையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை - 13.10.19 : ஐக்கிய நாடுகளின் பொதுஅவை 2009-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மனத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்று மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்முறை விளக்கம் நடைபெற்றது. இதில், ஆபத்து நேரங்களில் சிக்கிக் கொள்பவர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, சுனாமி உள்ளிட்ட பேரழிவில் இருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது போன்ற நிகழ்ச்சிகளை தீயணைப்பு வீரர்கள் செய்த காண்பித்தனர்.

தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றனர். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கண்மணி, வட்டாட்சியர் முருகானந்தம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் : மணிகண்டன்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world disaster reduce day in Mayiladuthurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->