சிதம்பரம் : ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவலர் சார்லஸ் இருவரும் கஞ்சித்தொட்டி முனை அருகே சம்பவ தினத்தன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவரை உதவி ஆய்வாளர் வேல்முருகன் மடக்கி இருக்கிறார். இதையடுத்து அனைத்து ஆவணங்களும் இருப்பதாக இருசக்கர வாகனத்தில் வந்தர்வர்கள் தெரிவித்துள்ளனர், இருசக்கர வாகனத்தில் இருவர் தான் வரவேண்டும் என்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் கூடுதலாக 2 குழந்தைகளை அழைத்து வந்தது ஏன் என உதவி ஆய்வாளர் வேல்முருகன்கேள்வி எழுப்பியிருகிறார்.  

இதனால் உதவி ஆய்வாளர் வேல்முருகனுக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.

இதனால் காவலர்கள் அபராதம் வீடியோ இணையத்தில் பரவியதால் பணியிடை மாற்றம் செய்திருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட சிதம்பரம் நகர காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர்  திரு வேல்முருகன், காவலர் மற்றும் திரு மரியசார்லஸ் ஆகியோர் 13.10.2019 தேதி மாலை சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் வாகன தணிக்கையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் எஸ்.பி.அபினவ் உத்தரவு இட்டுள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

work transfer for chidambaram police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->