ஒவ்வொரு கையிலும் ஒரு கத்தி.. கதி கலங்கி வரும் திருப்பூர் - தண்ணி அடிக்க வருபவர்களை தனி ஆளாய் நின்று துணிந்து அடிக்கும் பெண்..! ( அதிரடிக்கும் வீடியோ) - Seithipunal
Seithipunal


தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 4,700 மது கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வரும் நிலையில் மதுவால் பலரின் வாழ்க்கை சீரழிகிறது.

எனவே, மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், 'படிப்படியாக மது விலக்கு' என்ற, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இரு ஆண்டுகளில், 1,000 மது கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மதுக்கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது.

இதன்படி, காலை, 10:00 மணிக்கு திறக்கப்பட்ட மது கடைகள், 2016 மே முதல், மதியம், 12:00 மணிக்கு திறக்கப்படுகின்றன.

ஆனால் பல இடங்களில் முறைகேடான முறையில் காலை நேரம் முன்னதாகவே திறக்கப்படுகின்றது. இதனால் சில குடிமகன்கள் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு குடும்பத்தை சீரழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில், பாண்டியன் நகர் டாஸ்மாக் கடை முன்பு இரண்டு கையில் இரண்டு கத்தியுடன் நின்று கொண்டு குடிமகன்களை கதி கலங்கவிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women with knife near tasmac shop


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->