டாஸ்மாக் கடை முன் குழந்தைகளுடன் போராட்டம் செய்த தாய்.. நடவடிக்கை எடுத்த போலீஸார்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை பகுதியில் ஏழுமலை என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகின்றார். இவர்கள் குடும்பத்துடன் வசித்து வரும் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. 

இந்த டாஸ்மாக் கட்டிடத்தின் உரிமையாளர் ஏழுமலைக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே நேற்று காலை டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறக்க வந்த பொழுது செல்வி தனது குழந்தைகளுடன் சேர்ந்து கடைக்கு முன்பாக அமர்ந்து கொண்டு கடையை திறக்க விடாமல் போராட்டம் செய்ய ஆரம்பித்தார். 

இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் செல்வி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட துவங்கினர். 

அப்பொழுது செல்வி, " சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் விடுமுறை விடப்பட்டு இருந்தது அப்போது நான்கு பேர் வந்து தகராறு செய்தனர். அவர்கள் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கும் வரை டாஸ்மாக் கடை திறக்க விடமாட்டோம்." என்று தெரிவித்துள்ளார். 

பின்னர் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் மாலை 6 மணிக்கு அவர்கள் போராட்டம் கலைந்து கடை திறக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women strike in tasmac shop


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->