பெண் ஆய்வாளரே, பெண்ணிடம் செய்த தகாத காரியம்.! மனமுடைந்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் புஷ்பலதா என்ற பெண் குலசேகரம் அருகே மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருக்கின்றார். இவர் குழுவில் இருக்கும் பெண்களுக்கு கடன் வாங்கி கொடுத்து வந்து இருக்கின்றார். அது போல ஜெயராணி என்ற பெண்ணுக்கும் கடன் வாங்கி கொடுத்து இருக்கின்றார். 

ஆனால், ஜெயராணி அதனை சரியாக செலுத்தவில்லை. எனவே ,புஷ்பலதா கடனை திருப்பி செலுத்துமாறு ஜெயராணி இடம் வற்புறுத்தி இருக்கின்றார். ஆனால், ஜெயராணி அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஜெய ராணியின் வீட்டிற்கே சென்று திட்டி இருக்கின்றார். இதன் காரணமாக பணம் கொடுக்காத அந்தப் பெண் புஷ்பலதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனிதா என்பவர் புஷ்பலதாவை அழைத்து விசாரணை நடத்தி அவரை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி இருக்கின்றார். இதன் காரணமாக மனமுடைந்த புஷ்பலதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தநிலையில், அவர் இன்று உயிரிழந்து இருக்கின்றார். புஷ்பாவின் மரணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புஷ்பலதா உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women police scolding in kanyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->