கூடுதல் நகையை கணக்கில் சேர்ததால் நகைகடன் கிடைக்கவில்லை.. ஆட்சியர் அலுவலகத்தில் மண்எண்ணெயுடன் வந்த பெண்..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனூரை சேர்ந்த பரமசிவம். இவரது மனைவி பவுன்தாய். இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றிய நிலையில் வந்திருந்தார்.  அவர் மீது மண்எண்ணெய் வாசம் அடித்ததால் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் தெரிவிக்கையில் எரசக்கநாயக்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் என்னுடைய 40 கிராம் தங்க நகையை அடகு வைத்து கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கடன் பெற்றுள்ளதாகவும் எனது நகையுடன் மேலும் 200 கிராம் கூடுதலாக எடையளவில் சேர்த்து விட்டனர்.

அதனால், அரசு அறிவித்தப்படி எனக்கு நகைக்கடன் கிடைக்கவில்லை. எனவே எனது நகையை ஆய்வு செய்து எனக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman attempts suicide in front of Collector Office at theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->