கைவிட்ட காதல் கணவன்.. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி..! - Seithipunal
Seithipunal


இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா.. தனது குழந்தையுடன் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, திடீரென தன் மீதும் தன் குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை உடனடியாக அவரை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தெரிவித்திருப்பதாவது., அவருக்கும் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பது அவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு வந்தனர். கடந்த 2007ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின் ஹேமாவின் தாயார் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுத வேண்டியது அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை இது பற்றி அவரிடம் கேட்டபோது தன் சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது அவரிடம் சேர்ந்து வாழும்படி பலமுறை கேட்டும் அவர் அவரும் அவரது பெற்றோரும் தன்னை தகாத வார்த்தைகளால் சொல்லி திட்டியதாகவும் இதுபற்றி மீண்டும் பேசினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இருபத்தி ஏழாம் தேதி அவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது இதுபற்றி அவள் நிலையத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவே தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Attempt Suicide With Their Children In erode


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->