சினிமாப்பாணியில் வியாபாரி கடத்தல்.! தன் கணவனை துணிச்சலுடன் போராடி மீட்ட மனைவி.! அதிரடியாக களமிறங்கிய போலீசார்!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையை சேர்ந்தவர் சரவணன்.44 வயது நிறைந்த இவரது மனைவி குணா.

 கடந்த 28ஆம் தேதி சரவணன் இது சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்த மர்ம கும்பல் என்று அவரை மிரட்டி காரில் கடத்தி சென்றது. பின்னர் சரவணனின் மனைவி குணாவிற்கு போன் செய்த அந்த கடத்தல் கும்பல்,உன் கணவர் சரவணனை கடத்தி விட்டோம்.உடனே 25 லட்சம் பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு உனது கணவரை காப்பாற்றிக் கொள் இல்லை எனில் அவரை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். 

இந்நிலையில் குணா தன்னிடம் 15 லட்சம்தான் பணம் உள்ளது. அதனை வாங்கிக்கொண்டு தயவுசெய்து என் கணவரை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார்.அதற்கு ஒப்புக் கொண்ட அவர்கள்  குணாவை ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.

 பின்னர் அங்கு அவரிடம் 15 லட்சத்தை வாங்கிய மர்மகும்பல் சரவணனை செங்கம் பகுதியில் விட்டு விடுவதாக கூறி தப்பிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சரவணனை விடாமல் மீண்டும் குணாவிற்கு போன் செய்து, மேலும் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த குணா உடனடியாக இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரை ஏற்று கொண்ட போலீசார் உடனடியாக குணாவிடம் 10 லட்சம் பணத்தைக் கொடுத்து கடத்தல் கும்பல் கூறிய இடத்தில நிற்கவைத்தனர்.  பின்னர் அவர்கள் காரில் இருந்து இறங்கி வந்த நிலையில் கும்பலில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசாரை கண்டு தப்பித்து ஓடிய மற்ற கடத்தல்காரர்களையும் போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.

 பின்னர் அவர்களின் பிடியில் இருந்த சரவணனையும் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்டனர். அந்நிலையில் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சரவணன் கூறுகையில், என்னை அந்த மர்ம நபர்கள் கடத்தி சென்று இருநாட்கள் காரிலேயே வைத்திருந்தனர் மேலும் மது அருந்த மாட்டேன் என்று எவ்வளவோ கூறியும் ,என்னை குடிக்க வைத்து மயக்கத்திலேயே வைத்திருந்தனர். மேலும் அது மட்டுமின்றி என்னை பயங்கரமாக கொடுமைப்படுத்தினர். கண்டிப்பாக இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன் அந்தளவுக்கு அவர்கள் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினர் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife save husband from kidnapper


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->