தமிழகத்தில் சாதிக்கலவரம் வராமல் தடுக்க ஒரே வழி இது தான்!! வெளியாகும் புதிய தகவல்!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தல் என்றாலே சிதம்பரம் தொகுதி எப்பொழுதும் ஸ்பெஷலாக பார்க்கப்படுவது வழக்கம். காரணம் இங்கு விசிக தலைவர் திருமாவை நிறுத்துவதால் அதீத சிக்கல்கல்களும் பதற்றங்களும் நிலவுகிறது. 1999 முதல் திருமாவளவன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதி ஒரு தனித்தொகுதியாகும். இங்கு ஆதிதிராவிடர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

Related image

2009 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்புவரை வன்னியர் மற்றும் ஆதிதிராவிட மக்கள் மிகவும் இணக்கமாகவே இருந்துள்ளனர். இன்றளவும், நன்மை தீமைகளை பகிர்ந்து கொள்ளும் சமூகம் தான் இரண்டும். ஆனால், சில அரசியல்வாதிகள் இரு சமூகத்தினரையும் பிரித்து சூழ்ச்சி அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறது.  

2009 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இவ்விரு சமுதாயத்தினரின் ஓட்டுக்களை பெற்றே திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால், வெற்றிபெற்ற பின்னர் வாக்களித்த வன்னியர் சமூகத்திற்கு எதிரானவராக திருமா உருவெடுத்தார் இதற்கு முக்கிய காரணம் திமுக தான் என்கின்றனர்.

யார் ஜெயித்தாலும் பரவாயில்லை திருமா தோற்கவேண்டும் இல்லையெனில், வியாபாரம் பாதிக்கப்படும். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற முடிவுக்கு தள்ளப்பட்டனர் வன்னியர்கள் மற்றும் தலித் அல்லாத சமுகத்தினர். அதிமுக அல்லாதவர்கள் கூட அதிமுகவின் வாக்குவங்கியை அதிகரித்து திருமாவை வீழ்த்தவேண்டும் என நினைக்கவைத்து விட்டனர். 

இந்நிலையில், 2014 தேர்தலில் படுதோல்வி அடைந்தார் திருமா. 2019 தேர்தலிலும் யாரும் ஏற்காத வேட்பாளரான திருமாவை நிறுத்தி சாதிக்கலவரத்திற்கு வித்திட்டது திமுக. அதன் விளைவு தான் பொன்பரப்பி விவகாரத்தில், ஆதி திராவிட மக்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு முடிந்தபின்னரும், வாக்குச்சாவடியில் பிரச்சனையை ஏற்படுத்த சிலர் நுழைந்துள்ளனர்.

அங்கு வயதானவர்களை வற்புறுத்தி பானைக்கு வாக்கு கேட்கவே பிரச்னை ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறிருக்க ஒருத்தரப்பை மட்டும் குறைகூறி தனக்கு வாக்களிக்காத வன்னியர்களை திமுக பழிதீர்த்துக்கொள்ள துடிக்கிறது என்றும்,

தேர்தல் வரை வன்னியர்கள் மீது அக்கறை உள்ளது போல பேசிவந்த ஸ்டாலின் தேர்தல் முடிந்ததும், வழக்கம் போல வன்னியர் எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க துவங்கிவிட்டார் என்றும், இதற்கெல்லாம் தீர்வு கொங்கு பகுதியை போல வடக்கிலும் திமுகவை தள்ளிவைப்பது தான் என்றும், இல்லையெனில் பதற்றமான சூழலுக்கு மக்களை ஆளாக்கி அரசியல் செய்வது இவர்களின் வழக்கமான வேலை தான் என்றும் இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

English Summary

why community fight in north Tn


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal