அதிமுக தலைமை பொறுப்பு யாருக்கு.? அவசர அவசரமாக கூடும் முக்கிய நிர்வாகிகள்.! வெளியாக போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை  அல்லது இரட்டை தலைமையின் கீழ் செயல்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.  இந்த கூட்டம் அதிமுக வினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

தேர்தல் முடிந்ததும் நடைபெறும் இந்த சர்ச்சையை அடுத்து அதிமுக தவிர்த்து இருக்கலாம் என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் ராஜன்செல்லப்பா பேசியபோது அதிமுகவிற்கு ஒற்றை தலைமையை வேண்டுமென்று கூறினார். 

இதனால் தான் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தோம் என தெரிவித்தார். இரட்டை தலைமை இருப்பதால் உடனுக்குடன் எந்த முடிவுகளையும் எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவல் அதிகம் அடையாளம் காட்ட பட்டவர் தலைமை பொறுப்பை  ஏற்கவேண்டும் என்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் யாரும் நெருங்கவில்லை என்றும் கூறினார். தலைவர் யார் என்பதை இந்த பொதுக்கூட்டத்தில் முடிவெடுப்போம் என ராஜன்செல்லப்பா கூறினார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is responsible for admk? who are in chief executives urgent hurry. announcement to be released


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal