யார் இந்த மூக்கு பொடி சித்தர்!  இதுவரை இவரை பற்றி நீங்கள் அறிந்திடாத, சுவாரஸ்யமான தகவல்கள்!!  - Seithipunal
Seithipunal


நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் பல சித்தர்கள் வாழ்ந்து வருகின்றனர். பல சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து ஜீவா சமாதி  ஆகி உள்ளனர். இந்நிலையில், பிரபல சித்தரான  மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை திருவண்ணாமலையில் காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும். 

மூக்குப் பொடி சித்தருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் பக்தர்களாக இருந்தனர். குறிப்பாக அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் மூக்குப் பொடி சித்தரின் தீவிர பக்தர்கள் ஆவார். அவ்வப்போது டிடிவி தினகரன், ரங்கசாமி ஆகியோர் மூக்குப் பொடி சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று செல்வார்கள். 

யார் இந்த மூக்குப்பொடி சித்தர். இவரை பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி இங்கு காண்போம்.

* விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் தான் மூக்குப்பொடி சித்தரின் சொந்த ஊர். அதேபோல இவருடைய இயற்பெயர் மொட்டையக்கவுண்டர் ஆகும். மூக்குப்பொடியை அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் மூக்குப் பொடி சித்தர் என இவரை அழைத்தனர். 
  
* கடந்த சில வருடங்களுக்கு முன் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர். 

* அவ்வப்போது டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சித்தரிடம்
மூக்குப்பொடி வாங்கிக்கொடுத்து ஆசிபெற்றுச் சென்றுள்ளனர். 


   
* மூக்குப்பொடி சித்தரின் மனைவி இறந்த பிறகு, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலையில் ஆன்மீக வாழ்வு வாழ்ந்துவாழ்கிறார். 

* அவர் யாரிடமும் பற்று செலுத்துவதில்லை. சொந்த பேரப்பிள்ளைகளிடம் கூட ஒட்டாமல்தான் இருப்பார். 

* மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க மாட்டார். அடிக்கடி இடம் மாறுவார். 
 


* பல நாட்கள் உணவு உண்ணாமல் இருப்பார். ஆனால் திடீரென சாப்பிடத் தொடங்குவார்.

* தமிழக மக்களுக்கு வரும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்தும் சக்தி கொண்டவர். 

* தமிழகத்தை தானே புயல் தாக்க தொடங்கிய சில தினங்களுக்கு முன், மதிய நேரத்தில் கடலூர் சென்ற சித்தர், கடலைப் பார்த்து "அமைதியாக இரு, சத்தம் போடாதே" என்று பேசியுள்ளார்.

* பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன், நடு ரோட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கிழித்தெறிந்தார்.  

* அனுமதியில்லாமல் அவரை யாரும் சந்திக்க முடியாது. தரிசிக்க முடியாது.  
படையெடுக்கும் பணக்காரர்கள்
 
* ஒரு முறை சித்தரின் முகம் பார்த்து ஆசி வாங்கிவிட்டால் அவருக்கு வாழ்வில் எப்போதும் ஏறுமுகம்தான் என்கிறார்கள். 

* இவருக்கு வெளிநாட்டு பக்தர்கள் தான் அதிகம். 

* இந்நிலையில்,  திருவண்ணாமலை  கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியிருந்த, மூக்குப் பொடி சித்தருக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவு ஏற்பட்டு, இன்று அதிகாலை 5 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is Mookupodi Sithaar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->