#நடந்தது என்ன?.. தடங்கலுக்கு மன்னிக்கவும்.. முகநூல், இன்ஸ்டா, வாட்சப் நிறுவனம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தொழில்நுட்ப கோளாறால் முடங்கியுள்ள வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் செயலிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் உபயோகம் செய்யப்படும் முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அவை முடங்கியதாக தெரியவருகிறது.

இந்நிலையில், வாட்சப் சார்பாக ட்விட்டர் பதிவில், " சிலர் தற்போது வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், கூடிய விரைவில் அதனை தெரிவிக்கிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி! " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்ஸ்டாகிராம் செயலியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " இன்ஸ்டாகிராம் மற்றும் நண்பர்கள் இப்போது கொஞ்சம் சிரமப்படுகிறார்கள், அவற்றைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சிக்கல்கள் இருக்கலாம். எங்களுடன் இருங்கள், நாங்கள் அதில் இருக்கிறோம்! " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp Facebook Instagram Down Official Announcement form Twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->