ஒரு கலெக்டர் செய்யும் காரியமா இது..? மொத்த சோலியும் முடிச்சு போட்டாரே..! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பச்சைமலை அடிவாரத்தில் மளையாளப்பட்டி சின்னமுட்லு அருகே அமைய உள்ள நீர்த்தேக்க இடத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்வையிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சின்னமுட்லுநீர்த்தேக்க இடத்தை பார்க்கிறபோது மேட்டுர் அணையைப் போன்று ஒரு மிகப்பெரிய நீர்த்தேக் கம் அமைவது இம்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும். இதனால் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதியும், 100க்கும் மேற்பட்டகிராமங்களுக்கு குடிநீர் வசதி உள்பட நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு நஷ்டஈடு பெற்றுத் தரக் கோரியும் இந்த நிலம் தவிர வேறு நிலம் இல்லாதவர்களுக்கு மாற்று நிலம் அரசு வழங்க வேண்டும்.

வெகு மக்களுக்கு நன்மை தரக் கூடிய இத்திட்டத்திற்கு தமிழக அரசின் உயர் பதவியில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியரே அப்பகுதியில் நிலங்களை வாங்கி வைத்துக் கொண்டு தடையாக உள்ளார்.

இதில் தமிழக அரசு தலையிட்டு இத்திட்டம் நிறைவேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் பயனள்ளதாக இருக்கும்இத்திட்டம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மானாவரி நிலங்களெல்லாம் பாசன வசதி பெற்று பசுமையாக காட்சி அளிக்கும் என்றார்.

பின்னர் விசுவக்குடி நீர்த்தேக்கத்தையும் அதனுடைய பயன்பாடுகளையும் பார்வையிட சென்றார். அங்கே ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து விசுவக்குடி நீர்த்தேக்கத்தின் பயன்பாடுகள் சம்பந்தமாக கேட்டபோது,

இத்திட்டம் நிறைவேற்றப் பட்டதால் 1200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளது. ஆறு ஏரிகள் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் வசதி கிடைக்கக் பெற்றுள்ளது. இப்பகுதியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சுற்றுப்பகுதயில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைத்துள்ளது என தெரிவித்தனர்.மேலும் மாவட்டத்தில் நீர்த்தேக்கத்துடன் கூடிய எவ்வித சுற்றுலாத் தலங்களும் இல்லாததால் விசுவக்குடி நீர்த்தேக்கத்தையொட்டி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2கோடிமதிப்பிலான பூங்கா அமையப் பெற்று இந்த மாவட்ட மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

அதோடு இங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு உண்டான சாலை மற்றும் போக்குவரத்து வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமாய் அதிகாரிகளிடம் அவர்கள் வலியுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

water resource management


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->