இதுவரை சந்திக்காத பேராபத்தை சந்திக்கப்போகும் சென்னை.. வெளியான அதிர்ச்சித் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் போதிய மழை இல்லாதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், ஆகிய நான்கு ஏரிகள் தான். இவற்றில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்டது.

இந்த நிலையில், சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் அனுப்பப்பட்டு வந்தன இந்த குடிநீரை தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது புழல் ஏரியில் 2 மில்லியன் கன அடி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த  புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும் வறண்டு விட்டதால் சென்னை வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. 

இந்நிலையில், சென்னை அனகாபுத்தூர் அமரேசன் நகரில் தண்ணீர் பிரச்னையில் சுபாஷினி என்ற பெண்ணை கத்தியால் வெட்டிய சபாநாயகரின் ஓட்டுநர் ஆதிமூலராமகிருஷ்ணன். அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் ஆதிமூலராமகிருஷ்ணன் தாக்கியுள்ளார். அதன் பின் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

water problem in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->