விவசாயின் கிணற்றில் நடக்கும் விபரீத மாற்றம்..? அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வலப்பிரமன்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரவிச்சந்திரன். இவரது வயலில் 1980-ம் ஆண்டு சுமார் 40 அடி ஆழத்தில் வெட்டப்பட்ட கிணறுஒன்று உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டதால், கிணற்றில்உள்ள நீரும் குறைந்து விட்டது. இதையடுத்து ரவிச்சந்திரன் கிணற் றில் 100 அடி ஆழத்திற்கு போர்வெல் போட முயன்றுள்ளனர்.

தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்த அந்ததிட்டத்தை கைவிட்டு விட்டார். இதையடுத்து தொடர்ந்து மழை பெய்ததால் கிணற்றில் தண்ணீர் ஊறியது. 37 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியது. ரவிச்சந்திரன் வயலின் அருகே மற்றொரு விவசாயி போர்வெல் அமைத் துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கிணற்றில் அதிக அளவில் திடீர் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், புவியியல் துறை அலுவலர்களை கொண்டு கொந்தளிப்பு ஏற்படும் கிணற்றினை ஆய்வு செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

water level increased abnormally


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->