கறார் காட்டிய தமிழகம், கர்நாடகாவை குறிவைக்கும் கேரளா.! கதறும் மைசூரு மக்கள்.!  - Seithipunal
Seithipunal


கேரளா பல்வேறு வகையாக அண்டை மாநிலங்களில் அத்து மீறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. இதன் காரணமாக அண்டை மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன்பாக தேசிய பசுமை தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழுவின் தமிழக தலைவர் ஜோதிமணியிடம் மக்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கொண்டு சென்றனர்.

அப்போது கேரளாவில் இருந்து இங்கு கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டது. எனவே கூடலூர் வனப்பகுதிகளில் கழிவு கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் ஏற்பட்ட கெடுபிடி காரணமாக கழிவுகளை இங்கே கொட்ட முடியாது என்ற நிலையில் கேரளா அந்த கழிவுகளை தற்போது கர்நாடக மாநிலம் மைசூரில் கொட்டுவதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், "மைசூர், நஞ்சன்கூடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். மாத்திரை, ரத்தக்கறை படிந்த உடைகள், பஞ்சுகள் ,சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ கழிவுகளும் இங்கே கொட்டப்படுகின்றன. 

மேலும், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் வளர்ப்புப் பிராணிகள், வன விலங்குகள், மனிதர்கள் என அனைத்து தரப்பினரையும் நோய் தாக்கும் அபாயம் இருக்கின்றது. யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற மனோபாவத்தில் கேரள அரசு நடந்துகொள்கிறது. இதை உடனே தடுக்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்." என்று தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

waste cannot be dumped Tamil Nadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->