எந்த நேரத்திலும் செண்பகத்தோப்பு அணை திறக்கப்படலாம். பொதுமக்களுக்கு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


செண்பகத்தோப்பு அணை  எந்த நேரத்திலும்  திறக்கப்படலாம். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு  அபாய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்...!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட படைவீடு  ஊராட்சியில் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  கமண்டல நதியின் குறுக்கே  கட்டப்பட்டது செண்பகத்தோப்பு அணை. இந்த அணையின் மூலம் செய்யாறு, ஆரணி, களம்பூர், வந்தவாசி, ஆற்காடு  உள்ளிட்ட வட்டங்களில் உள்ள சுமார் 48 ஏரிகள் வாயிலாக சுமார் 7497 ஏக்கர்  பாசன வசதிபெறுகிறது.  இந்த அணையின் நீர்மட்டம்  மொத்த உயரம் 62.32 அடியாகும். 

இதன் முழுக்கொள்ளளவு  287.20 மில்லியன் கன அடியாகும். தற்போது தென்மேற்கு பருவமழை   ஒரு வாரமாக தொடர்ந்து பெய்துவருவதால் செண்பகத்தோப்பு அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.  அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயரும் போது  அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 

தற்போது 50.18 கன அடியாக உள்ளது. எனவே, தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நீர் வரத்தால் ஓரிரு நாளில் அணை 55 கன அடியைத் தொட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  ஆகையினால்,  செண்பகத்தோப்பு அணையின் உபரி நீர் செல்லும் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் ஆற்றில் யாரும் இறங்கவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் தண்டோரா மூலமாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Warning to the Public that the Shenbagathoppu Dam may open at any time


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->