பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் கவலைவென்றான் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில் இங்கு சத்துணவு சாப்பிட்ட 42 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பள்ளியில் நேற்று மதியம் 87 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். இதனையடுத்து மதியம் 3:30 மணியளவில் மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் ஏற்பட்டது. அதன் பிறகு சில நிமிடங்களில் பல பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அருகிலுள்ள மங்களக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்களை அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினார். இதனால் அனைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் செந்தில்வேல் முருகன் தெரிவித்ததாவது, சத்துணவில் முட்டை சாப்பிடாதவர்களுக்கு பாதிப்பில்லை என்று மருத்துவர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே முட்டை சாப்பிட்டதால் பாதிப்பா அல்லது உணவில் பல்லி விழுந்ததா என்று உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vomiting and dizziness in students ate nutritious food at school


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->