காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம்?... தமிழக அரசு தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நண்பர்கள், திரைத்துறையினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சின்னக்கலைவனர், பத்ம ஸ்ரீ விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செய்து தகனம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் தமிழக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivek's body cremated with police honors May be 17 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->