அதிமுக தலைமையை நோக்கி புறப்படும் விஷால்.! பரபரப்பு பேட்டி!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாண்டவர் அணி சார்பில் விஷால், பூச்சி முருகன், குஷ்பு, கோவை சரளா, லதா, மனோபாலா உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசுகையில் "கட்டட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள், அதை நாங்கள் நடக்க விட மாட்டோம். இன்னும் 4 அல்லது 6 மாத காலத்தில் கட்டட பணிகள் முழுமையாக முடிவடைந்து கட்டிடம் திறக்கப்படும். 

இந்த பணிகள் நிச்சயம் நிறைவேறும். நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்றபட்டது. இங்கு இருப்பவர்கள் யாரும் கட்சி சார்ந்து இல்லை. நடிகர் சங்கம் கட்டட திறப்பு விழா மற்றும் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க உள்ளோம்" என்று அவர் கூறினார்.

English Summary

vishal press meet about election


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal