பட்டாசு ஆலைகள் இயங்க நிபந்தனையுடன் அனுமதி... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் அதிகரித்து வந்ததை போன்று, இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்தது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

தொழிற்சாலைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஊரடங்கு துவக்கத்தில் 21 நாட்களுக்கு அமலான நிலையில், கரோனா வைரஸின் தாக்கத்தால் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் தொழிற்சாலைகள் இயங்க அனுமதியும், சில சட்ட திட்டங்களில் தளர்வும் வழங்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் இயங்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் இயங்கும் பட்டாசு ஆலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIruthunagar district collector announce fire work industry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->