கெத்து காட்ட தனிமை வீடியோ நண்பர்களுக்கு பகிர்வு.. தீக்குளித்து தற்கொலை செய்த மாணவி.! - Seithipunal
Seithipunal


காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகளை, காமுகன் அவனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியை அறிந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, பேரண்டம்மாள் தெரு பகுதியை சார்ந்த மாணவி, கல்லூரியில் முதல் வருடம் பயின்று வந்துள்ளார். இவருக்கு, முகநூல் வாயிலாக கோவில்பட்டி பகுதியை சார்ந்த விக்னேஸ்வரன் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், காதல் ஜோடிகள் தனிமையில் சந்தித்துள்ளனர். இதன்போது, இருவரும் எல்லை மீறியதாகவும் தெரியவருகிறது. இந்த சமயத்தில், காமுகன் மாணவிக்கு தெரியாமல் அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளான். 

திட்டமிட்டே நடத்தப்பட்ட இந்த சம்பவத்தில், சில நாட்கள் கழித்து மாணவிக்கு உண்மை தெரியவந்துள்ளது. மேலும், இந்த வீடியோ காட்சிகளை தனது நண்பர்களுக்கு வேண்டும் என்றே பெருமை காண்பிக்க அனுப்பி வைத்துள்ளான். 

இதனையறிந்த பெண்மணி காமுகனுடன் பேசாமல் பயத்தில் இருந்து வந்த நிலையில், தன்னிடம் பேசவில்லை என்றால் வீடியோ காட்சிகளை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளான். இதனால் மனமுடைந்துபோன மாணவி வீட்டில் தனியாக இருக்கையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், காமுகன் விக்னேஸ்வரனின் கொடூரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காமுகனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sivakasi girl Suicide Drama Love Culprit Cheats and Sent Private video to his Friends


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->