சொந்த கிராம பெண்களின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து ட்விட்டரில் பதிவு.. விருதுநகரில் காமுகன் கைது.! - Seithipunal
Seithipunal


கிராம பெண்களின் புகைப்படத்தை ஆபாச வசனத்துடன் போலி கணக்கு வாயிலாக பதிவு செய்து வந்த காமக்கொடூரன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்தது கண்டறியப்பட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மேட்டமலை பஞ்சாயத்து பகுதியை சார்ந்த சிறுமிகள், திருமணம் முடிந்த பெண்கள், திருமணம் முடியாத இளம்பெண்களின் புகைப்படங்கள் ஆபாச வசனத்துடன் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான தகவல்கள் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போலியான கணக்குகள் வாயிலாக பெண்களின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. 

போலியான ட்விட்டர் தளத்தை உபயோகம் செய்பவர் குறித்து விசாரணை செய்கையில், அது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டமலை பகுதியில் உள்ள இருப்பிடத்தை காண்பித்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியை சார்ந்த 3 இளைஞர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த காவல் துறையினர், அப்பகுதியை சார்ந்த வீரபத்திரன் என்ற இளைஞரை கைது செய்தனர். 

மேட்டமலை தெற்கு தெரு பகுதியை சார்ந்த வீரபத்திரன் என்பவன், கிராம பெண்களின் புகைப்படத்துடன் ஆபாச வசனங்களை சேர்த்து பதிவு செய்ததை கொடூரன் ஒப்புக்கொண்டுள்ளான். அவனின் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல் துறையினர் பிடித்துள்ளதோ ஒருவனை மட்டும் தான்., இதனைப்போன்று நூற்றுக்கணக்கில் போலியான ஆபாச ட்விட்டர் பக்கங்கள் இயங்கி வருகிறது. அதனையும் காவல் துறையினர் முடக்கி காமுகன்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sathur Fake Twitter Id about Sex Videos Upload Man Arrest by Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->