ஊரடங்கை மீறினால் உடனடி கொரோனா டெஸ்ட்.. பாசிட்டிவ் என்றால் வழக்கு..! இராஜபாளையம் காவல்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இரண்டாவது அலையின் வீரியத்தை கட்டுப்படுத்த ஜூன் 7 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல்வேறு காரணங்களை கூறி வெளியே செல்லும் சூழலும் தொடர்ந்து வருகிறது. இதனால் காவல் துறையினர் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்களிடம் வாகன பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

சில நேரங்களில் காவல் துறையினர் வாகன ஓட்டிகளை நூதன முறையில் கண்டித்து எச்சரித்து அனுப்பி வைக்கும் நிலையில், உடனடி கொரோனா சோதனை செய்யும் சூழலும் நடந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் நகர் பகுதியில் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர். 

இராஜபாளையம் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவுகளை மீறி அனாவசியமாக இருசக்கர வாகனத்தில் சுற்றிவரும் நபர்களுக்கு உடனடி கொரோன பரிசோதனை செய்யப்படுகிறது. இராஜபாளையம் மாநகர சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சாலைகளில் அனாவசியமாக வாகனத்தில் சுற்றி வரும் நபர்களுக்கு எடுக்கப்படும் கொரோனா மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Rajapalayam Police Takes Action Offence Corona Rules Test Corona immediately 1 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->